தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,61,429 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 352 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 561 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 8,43,423 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,556 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 5,450 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.