மணப்பாறையில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் வேட்பு மனு
மணப்பாறையில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் வேட்பு மனு தாக்கல் – முரசு கொட்டி வாக்கு சேகரித்த கட்சி தொண்டர்.
மணப்பாறையில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் வேட்பு மனு தாக்கல் – முரசு கொட்டி வாக்கு சேகரித்த கட்சி தொண்டர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும், தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான வழக்குரைஞர் பி.கிருஷ்ணகோபால், இன்று தனது பேரவை உறுப்பினருக்கான மனுத் தாக்கல் செய்தார்.
ஆண்டவர் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எனப் பிரமாண்ட பேரணியாக வந்த கிருஷ்ணகோபால், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆர்.பார்த்திபனிடம் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
பேரணிக்கு முன்பாக தாரைத்தப்பட்டைகள் முழங்கிய போது, தேமுதிக கட்சி தொண்டர் ஒருவர் முரசு ஒன்றில் பறைசாற்றி தேமுதிக வேட்பாளருக்கு வாக்குகளைச் சேகரித்தார்.