தமிழ்நாடு

காங்கயத்தில் முகக்கவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்

DIN


 காங்கயம்: காங்கயத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 19 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக நகரில் உள்ள திருப்பூர் ரோடு, பழையகோட்டை, ஈரோடு ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டுநர்கள் 19 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.

காங்கயம் நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் உதவியாளர் வருண் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியபோது, பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கரோனா குறித்த வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT