தமிழ்நாடு

அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்

DIN

அரசியல் பொதுக்கூட்டங்களில் முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு கட்சியினர் வலியுறுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

அரசியல் கூட்டங்களாலும், குடும்ப நிகழ்ச்சிகளாலும் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 19 மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெறும் கூட்டங்களில், முகக்கவசம் அணிய தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

அபராதம் விதித்தால் மட்டுமே பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது. கடந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்து காணப்பட்ட இடங்களில் இம்முறை அதிகரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT