முகப்பு
தமிழ்நாடு

தீய சக்தி திமுக, துரோகக் கட்சி அதிமுகவை வீழ்த்துவதுதான் ஒரே நோக்கம்: டிடிவி தினகரன்

தீய சக்தியான திமுகவையும், துரோகக் கட்சியான அதிமுகவையும் வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
டிடிவி தினகரன்
பகிர்:

தீய சக்தியான திமுகவையும், துரோகக் கட்சியான அதிமுகவையும் வீழ்த்துவதுதான் எங்கள் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

வெற்றிக் கூட்டணியான அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். 

தமிழகத்தில் தீய சக்தியான திமுகவை வரவிடக்கூடாது, துரோகக் கட்சியான அதிமுகவை வரவிடக்கூடாது என ஒன்று சேர்ந்துள்ளோம். 

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம். ஆனால் எங்களுடைய கூட்டணி கட்சிகளின் குறிக்கோள் திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான். 

நல்லதொரு ஆட்சியை ஊழலற்ற வெளிப்படையான மக்களுக்கு நன்மை பயக்கின்ற ஆட்சியைத் தரும் கூட்டணி எங்கள் கூட்டணி என்று பேசினார். 

மேலும் சசிகலாவின் ஆதரவு இந்த கூட்டணிக்கு இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், சசிகலாவின் மானசீக ஆதரவு எங்கள் கூட்டணிக்குத்தான் உண்டு என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →