தமிழ்நாடு

கரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? சத்யபிரத சாஹு விளக்கம்

DIN


சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து சத்ய பிரத சாஹு விளக்கம் அளித்தார்.

அப்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சத்ய பிரத சாஹு,  கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. 

பிகாரில் கரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில்தான் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது என்றும், பிகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது இருந்த கரோனா பாதிப்பு அளவுக்கு தற்போது தமிழகத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

பிகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது, சுமார் 12 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர்களுக்கு நத்தம் விசுவநாதன் பணம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு, இந்த சம்பவம் குறித்து  மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக சத்ய பிரத சாஹு பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT