தேர்தலில் போட்டியிடும் உரிமையும் முக்கியம்: உயர்நீதிமன்றம் கருத்து 
தமிழ்நாடு

தயாரிப்பாளர்கள் சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி வழக்கு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவி

DIN


சென்னை: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் மன்னன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் சங்கம் கடந்த 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரிலும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரிலும் இரண்டு புதிய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, ஒரு சங்கத்தின் பெயரை ஒத்து மற்றொரு சங்கத்தை பதிவு செய்யக் கூடாது. எனவே இந்த இரண்டு சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி சென்னை சங்கங்களின் பதிவாளர்களுக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை தெற்கு மற்றும் மத்திய மாவட்ட சங்கங்களின் பதிவாளர்கள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் மனு குறித்து வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT