மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை, திமுகவுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கிறது. அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட தகவலில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை (19.3.2021) பகல் 12.00 மணியளவில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.