FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேளூரில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: பொதுமக்களுக்கு பேரூராட்சி விழிப்புணர்வு

சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சியில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்  பேரூராட்சி பணிய

28 ஜனவரி 2024, 1:17 am IST
பேளூரில் முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரூராட்சி பணியாளர்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சியில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்  பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த,  பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள், பயணிகள், வணிக நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பேளூர் பேரூராட்சியில், செயல்அலுவலர் பெ.ஜெயபிரகாஷ் தலைமையில் , பேரூராட்சி பணியாளர்கள், கரோனா நோய் பரவலை தடுப்பதில் முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகின்றனர்.

Advertisement

Advertisement

கடந்த இரு தினங்களில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற, 15 பேருக்கு, தலா ரூ 200 வீதம், ரூ.3000 பேரூராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்து வசூலித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments