தமிழ்நாடு

சேந்தமங்கலத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சுயேச்சையாக வேட்பு மனு

DIN


நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் வியாழக்கிழமை சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தார்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் 1996 முதல் 2001, 2016 முதல் 2021 வரை அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றியவர் சி. சந்திரசேகரன். இந்த முறை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு எஸ். சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். இதற்காக சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக தரப்பில் இவருக்கு மிரட்டல் விடுத்து வந்த நிலையிலும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வியாழக்கிழமை அவர் சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ரமேஷிடம் மனுத் தாக்கல் செய்தார். 

முன்னதாக தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் 3 போலீஸார் உடன் செல்லும் வகையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT