முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.33,856-க்கு விற்பனை

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.34,000-க்கு விற்பனை
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. 

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து ரூ.4,232 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.71.50 ஆகவும் கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71,500 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,232

1 பவுன் தங்கம்...............................33,856

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,240

1 பவுன் தங்கம்...............................33,920

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000

முழு கட்டுரையைப் படிக்க →