தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது: கே.எஸ். அழகிரி
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி,
நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளேன். தமிழகத்தில் விரைவில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர். தமிழகத்தில்
இந்த தேர்தலின் முக்கிய கருப்பொருள் என்னவென்றால் தமிழ்நாட்டை தமிழகம் ஆள வேண்டுமா, தில்லி ஆள வேண்டுமா என்பதே.
மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் தமிழகத்தை தமிழகம் ஆளும், ஸ்டாலின் ஆள்வார். கூட்டணி கட்சிகளாகிய நாங்கள் துணை நிற்போம். இல்லையெனில் தமிழகத்தை பாஜகதான் ஆளும்.
தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை; 234 தொகுதிகளிலும் அதிமுக மூலமாக பாஜகதான் நிற்கிறது.
நீட் தேர்வாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இயற்கைப் பேரிடரின்போதும் சரி மத்திய அரசிடம் இருந்து எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை.
மத்திய அரசு ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதில் உறுதியாக இருக்கிறது.
சமஸ்கிருதத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருக்கும் தொகை சுமார் 300 கோடி ரூபாய். ஆனால் தமிழுக்கு ஒதுக்கியுள்ள தொகை மிகமிகக் குறைவு. இதுகுறித்து அதிமுக தான் கேட்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு கேட்கத் தைரியம் இல்லை. நாட்டில் பன்முகத் தன்மையை அகற்ற பாஜக முயற்சிக்கிறது. அதிமுக அதற்கு துணை போகிறது என்றார்.