முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரவல் : டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி முறையீடு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடக் கோரி  உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
உயர்நீதிமன்றம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடக் கோரி  உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம், தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக  மூட அரசுக்கு உத்தரவிடக் கோரி  முறையீடு செய்தார். 

இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments