வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியல் 
தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

DIN


புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பு மனுவை என்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரங்கசாமி வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில், 

திருப்புவனை - கோபிகா 
கதிர்காமம் - ரமேஷ்
ராஜ்பவன் - லஷ்மிநாரயணன்
மாஹே - அப்துல் ரஹ்மான்
காரைக்கால் வடக்கு - திருமுருகன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT