தமிழ்நாடு

வாழ்வாதாரம் உயரும் வரையே இடஒதுக்கீடு: கமல் தேர்தல் அறிக்கை

DIN

இடஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும் வரையே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுட்டுரைப் பக்கத்தில் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

  • அதில், அனைவருக்கும் மேடு, பள்ளம் இல்லாத சமூக நீதி வழங்கப்படும்.
  • ஊழலற்ற நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி.
  • படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு முழு மதுவிலக்கு கொண்டுவரப்படும்.
  • ஓராண்டில் ஆங்கில மொழிப் புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு வழங்கப்படும். 
  • நீட் தேர்வுக்கு பதிலாக தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு SEET தேர்வு நடத்தப்படும்
  • தமிழ்மொழியை ஆட்சி மொழி, கல்வி மொழி, ஆராய்ச்சி மொழியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க..

  • விவசாயம், தொழில், உற்பத்தி மற்றம் சேவைத் துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 - 20% வளர்ச்சியை உறுதி செய்வோம்.
  • மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்டிபப்பு பொருளாதார வளர்ச்சி.
  • அரசுப் பள்ளிக் கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக் கல்வி 9 - 10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு.
  • 1.3 கோடிப் பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு.
     

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம்..

1. மக்களாட்சி
2. அறிவார்ந்த அரசியல்
3. சமூக நீதி
4. அரசியல் நீதி
5. பொருளாதார நீதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT