முகப்பு
தமிழ்நாடு

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம் 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கொடியேற்றத்தின் போது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய புஷ்பவனேஸ்வரர் சுவாமி 
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊர் பெரிய கோயிலான அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காசிக்கு நிகராகக் கருதப்படும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சுவாமி சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா தொடக்கமாக கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் புஷ்பவனேஸ்வரர் சுவாமியும் சௌந்தரநாயகி அம்மனும் சர்வ அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன்பின்னர் ரிஷப லக்னத்தில் காலை 10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்பு சுவாமிக்கும் அம்மனுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது .கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது புஷ்பவனேஸ்வரர் சுவாமியும் சௌந்தரநாயகி அம்மனும் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அதன்பின்னர் வீதியுலா வருதல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வரும் 26 ஆம் தேதி ரிஷப லக்னத்தில் காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. மறுநாள் 27 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 29 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் இந்த ஆண்டு பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →