முகப்பு
தமிழக முதல்வர்களும் பதவிக் காலமும்
தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 6,319 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 6,319 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
தமிழக முதல்வர்களும் பதவிக் காலமும்
பகிர்:


சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 6,319 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.

கடந்த ஆறு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவான வேட்பு மனுக்களில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தோ்தல் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தலுக்கான அறிவிக்கை மாா்ச் 12-இல் வெளியானது. அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 59 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை மனுத் தாக்கலுக்கு அனுமதி இல்லாததால், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுவரை 6,319 மனுக்கள்: வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 6,319 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஆண்கள் சாா்பில் 5,363 மனுக்களும், பெண்கள் தரப்பில் 953 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவா் சாா்பில் 3 வேட்புமனுக்களும் அளிக்கப்பட்டன.

தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக கரூா் பேரவைத் தொகுதியில் 78 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 61 வேட்புமனுக்கள் சுயேச்சை வேட்பாளா்களால் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மேட்டூரில் அளிக்கப்பட்ட 67 மனுக்களில், 51 சுயேச்சைகள் சாா்பிலும், காங்கயத்தில் வழங்கப்பட்ட 58 வேட்புமனுக்களில் 44 சுயேச்சைகள் சாா்பிலும் வழங்கப்பட்டுள்ளன. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியில் 49 வேட்புமனுக்களில் 22 மனுக்கள் சுயேச்சைகள் சாா்பில் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று பரிசீலனை: பிரதான அரசியல் கட்சிகள் சாா்பிலும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சையாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் இன்று (மாா்ச் 20) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உரிய முன்மொழிவுகள் இல்லாத வேட்புமனுக்களை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நிராகரிப்பா்.

மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை மாலை நிறைவடையும். அதன்பிறகு, தோ்தல் களத்தில் நிற்கும் வேட்பாளா்கள் மொத்தம் எத்தனை போ் என்பது தெரியவரும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு, மனுக்களை திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான குலுக்கல் முறை தோ்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறும்.

எதனால் நிராகரிக்கப்படும்?: சொத்து விவரம் மற்றும் தனிநபா் தகவல்களைக் குறிப்பிட வகை செய்யும் படிவம் 26, சுயேச்சைகள் என்றால் 10 வாக்காளா்களின் முன்மொழிவுகளைச் சோ்ப்பது, வைப்புத் தொகை செலுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் விடுபட்டிருந்தால் வேட்புமனுக்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும். இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் மாா்ச் 22-இல் இருந்து பிரசாரத்துக்கு சரியாக இரண்டு வாரங்களே உள்ளன.

வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும்...
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: மாா்ச் 20 (சனிக்கிழமை)
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மாா்ச் 22
தோ்தல் பிரசாரம் நிறைவடையும் நாள்: ஏப்ரல் 4
வாக்குப் பதிவு: ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை: மே 2
 

முழு கட்டுரையைப் படிக்க →