தமிழ்நாடு

கோவையில் கமல்ஹாசன், வானதி சீனிவாசன் மனுக்கள் ஏற்பு

DIN

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு முக்கிய கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் 33 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனுக்கள் மீதான வேட்புமனு பரிசீலனை கோவை தெற்கு தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜேஷ் குமார் டோப்போ தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயகுமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT