முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி: அதிமுக, திமுக உள்பட 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு 

சங்ககிரியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் சனிக்கிழமை தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
வேட்புமனுதாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்களை தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் சனிக்கிழமை  பரிசிலனை செய்கிறார். 
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் சனிக்கிழமை தெரிவித்தார். 

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் எஸ்.சுந்தரராஜன் தலா 3 வேட்புமனுக்களும் அவருக்கு  மாற்று வேட்பாளராக அவரது மனைவி எஸ்.கௌசல்யாவும், திமுக சார்பில் கே.எம்.ராஜேஷ்  தலா 3 வேட்புமனுக்களும் அவருக்கு மாற்றாக அவரது மனைவி ஆர்த்தியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் எ.செல்லமுத்துவும் தலா இரண்டு வேட்புமனுக்களும் அவருக்கு மாற்று வேட்பளராக சி.இந்திராணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.சோபனாவும் அவருக்கு மாற்று வேட்பாளராக கே.கவிதாகதிர்வேல், அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும், மக்கள் நீதி மய்யம் சார்பிலும் கே.செங்கோடன் தனித் தனி வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தனர். 

மேலும் வேதா பேரவையின் சார்பில் ஐ.ஜெகநாதன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் சார்பில் சி.சிவலிங்கம், மை இந்தியா கட்சியின் சார்பில் கே.சேட்டு, அகில பாரத இந்து மகாசபை கட்சியின் சார்பில் கே.பிரபு,  சுயேட்சை வேட்பாளர்களாக எ.ஆரோக்கியசாமி,  பி.மணிவேல், சி.துரைராஜ், வி.சதீஸ்குமார்,  ஜி.சதீஸ்குமார், எம்.பாக்கியமணி,  ஆர்.செங்கோடன்,   பி.ரவிக்குமார், எம்.ஜெகநாதன், எஸ்.கோபாலகிருஷ்ணன், எ.ஆரோக்கியசாமி, எம்.பழனியப்பன், டி.வெங்கடாஜலம், எம்.குணசேகரன், பி.விஜயகுமார், விஜி என்கின்ற விஜயன் உள்ளிட்ட 35 பேர் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.  

தாக்கல் செய்த வேட்புமனுவினை தேர்தல் பொது பார்வையாளர் சின்மயிபுன்லிக்ராவ்கோட்மரே முன்னிலையில்  தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் பரிசிலினை செய்தார். உதவி தேர்தல் எஸ்.விஜி,  தனிவட்டாட்சியர் பாலாஜி, வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆ.செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர். பரிசிலினை செய்ததில் 35 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.