தமிழ்நாடு

ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாகவும், மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் மக்களிடையே பேசி வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். 

அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஆறுமுகசாமி ஆணையத்தை விமர்சித்தார். 

எனவே, இருவர் மீதும் தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT