ஸ்டாலின் ஒரு போலி விவசாயி: வந்தவாசியில் முதல்வர் பழனிசாமி பேச்சு
நான் வயலில் இறங்குவேன், மண்வெட்டி பிடிப்பேன், ஆனால் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
நான் வயலில் இறங்குவேன், மண்வெட்டி பிடிப்பேன், ஆனால் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வந்தவாசி தொகுதி பா.ம.க வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: வந்தவாசி தொகுதி, கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்(100 க்கு 70 பேர்)
விவசாயத்தையும், விவசாய தொழிலையும் காக்க வேண்டும் அதுதான் அரசின் முதன்மை கடமை.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையின் கீழ் 14,000 ஏரிகள் வருகின்றன. ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26,000 ஏரிகள் வருகின்றன. மொத்தம் 40,000 ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகள், குளங்களை தூர் வாரி கொண்டிருக்கிறோம்.
இதுவரை பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 6000 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட ரூ.1300 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலமாக நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 2,247 கோடி அளவுக்கு
நிவாரணம் வழங்கியுள்ளோம்.
ரூ. 9,300 கோடி பயிர் நஷ்டஈடு பெற்றுத் தந்த மாநிலம் தமிழ்நாடுதான். மக்கா சோளத்தில் அமெரிக்கன் படை புழு ஒழிக்க ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
சுமார் 12,110 கோடி ரூபாய் பயிர்கடன் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை பெருக்கியதால் தேசிய அளவில் கிருஷி கர்மான் விருதினை தொடர்ந்து 5 வருடமாக பெற்று வருகின்றோம். டிராக்டர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் =சேலம் தலைவாசல் வந்திருந்த போது அங்கு சேதமடைந்த கரும்புத் தோட்டத்தை பார்வையிட சென்றபோது 4 அடி உயரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்து பேண்ட், ஷர்ட், ஷூ அணிந்து கொண்டு ஏர் ஓட்டுகிறார். இவர்தான் போலி விவசாயி. ஆனால் நான் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு தோட்டத்தில் இறங்கி விவசாயத்தில் ஈடுபடுபவன். இது மண்வெட்டி பிடித்த கை. என்னுடைய குலத் தொழில் விவசாயம். விவசாயிகளை வேண்டுமென்றே திட்டமிட்டு அவர் கொச்சைப்படுத்துகிறார். அவருக்கு விவசாயம் தெரியாது.
அண்மையில் நான் நாகப்பட்டினம் சென்றிருந்தபோது நாகூர் தர்காவில் உள்ள குளக்கரையிலன் சுவர் சரிந்து கிடந்ததை செப்பனிட வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று ரூபாய் 4.34 கோடி மதிப்பீட்டில் குளக்கரை கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.