தமிழ்நாடு

10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள்: முதல்வர்

DIN

ஆரணி: ஆரணி பகுதியில் உள்ள ஏழை எளிய 10 ஆயிரம்
நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும் என்று ஆரணிக்கு
ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

ஆரணி அண்ணாசிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ஆரணி என்றாலே அதிமுக கோட்டைதான். எளிமையான வேட்பாளர் அதிமுக வேட்பாளர்  சேவூர் எஸ்.இராமச்சந்திரன்.

இவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். ஆரணி பகுதியில் அதிக அளவில் கைத்தறி நெசவாளர்கள் உள்ளார்கள். கைத்தறி நெசவாளர்கள் 1 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் அதனை தள்ளுபடி செய்யப்படும்.

விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1,000 யூனிட்டாக
உயர்த்தப்படும். விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 750 யூனிட்டுக்கு
பதிலாக 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

பருவகால மாற்றத்தால் தொடர்ந்து நூல் விலை உயர்வை ஜவுளித்துறை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு பஞ்சு கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு தேவையான பஞ்சினை பஞ்சு உற்பத்தி
காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

கைத்தறிக்கு வரி விலக்கு கைத்தறி ஆடைகளுக்கும் வரி விலக்கு வழங்க மைய அரசை வற்புறுத்துவோம். உயர்ந்து வரும் நூல் விலையை
கட்டுப்படுத்தி – நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நூல்
கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

நெசவாளர் நல வாரியம் கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். குறிப்பாக ஏழை எளிய 10ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும்.

மேலும், ஆரணியை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம்
அறிவிக்கப்படும் என்று பேசினார்.

உடன் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்,  புதிய நீதிக்கட்சி
நிறுவனர் ஏ.சி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல்,
ஒன்றியசெயலாளர்கள் க.சங்கர், பி.ஆர்.ஜி.சேகர்,  ஜி.வி.கஜேந்திரன்,
திருமால், நகரசெயலாளர் அசோக்குமார், நகர ஜெ பேரவை செயலர் பாரி பி.பாபு, மாவடடபொருளாளர் அ.கோவிந்தராசன், பாமக சேர்ந்த முன்னாள் எம்.பி.துரை,

பாமக மாநிலதுணைப் பொதுச்செயலாளர் ஆ.வேலாயுதம், பாஜக மாவட்ட தலைவர் சாசா வெங்கடேசன், புரட்சி பாரதம் மாவட்டசெயலாலர் அரையாளம் தாஸ், நகர செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோ ர் வந்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT