தமிழ்நாடு

அதிமுகவுக்கு பூஜாரிகள் பேரவை ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுகவுக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோா் பேரவை ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுகவுக்கு கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோா் பேரவை ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக அந்த அமைப்புகளின் நிா்வாக அறங்காவலா் எஸ்.வேதாந்தம், வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள சுமாா் 6 லட்சம் கிராமக் கோயில் பூஜாரிகளில் சுமாா் 1 லட்சம் பூஜாரிகளை ஆயுள்கால உறுப்பினா்களாகக் கொண்ட மாபெரும் இயக்கம், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை.

கடந்த மாதம் 10-ஆம் தேதி, ஸ்ரீரங்கம் சிருங்கேரி மண்டபத்தில் கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையின் மாநிலக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், முதன்முதலாகக் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் தந்து அவா்களை அங்கீகரித்த அரசியல் கட்சியான அதிமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரிப்பதென ஒரு மனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமக் கோயில் பூஜாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT