வீட்டு சுவரில் அதிமுக, திமுக, அமமுக சின்னம் 
தமிழ்நாடு

வீட்டு சுவரில் அதிமுக, திமுக, அமமுக சின்னம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாள்களே பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 

DIN

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாள்களே பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஒலிபெருக்கி பிரசாரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், சுவர் விளம்பரம் போன்றவற்றில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இந்நிலையில், தொகுதியில் ராசிபுரம் ஒன்றிய பகுதியான விசைத்தறி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள 85-ஆர்.கொமாரபாளையம் பகுதியில் பலரது வீடுகளில் பிரதான கட்சிகளின் சின்னங்களை வீட்டின் முன் வரைந்து வைத்துள்ளது. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இப்பகுதியில் பலரது வீட்டின் சுவர்களில் அதிமுக சின்னமான இரட்டை இலை, திமுக சின்னமான உதயசூரியன், அமமுக சின்னமான குக்கர் என ஒருசேர வரைந்து வைத்துள்ளது பார்ப்போரை வியக்க வைத்துள்ளது. உள்ளூரில் அனைத்து கட்சியிலும் எங்களது உறவினர்கள் உள்ளனர்.

அனைவரையும் திருப்திப்படுத்தும் வைகையிலேயே பிரதான கட்சிகளின் சின்னங்களை பொதுவில் வரைந்து வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில் கூறியிருப்பது, பிரதான கட்சிகளிடம் மகிழ்வை ஏற்படுத்தியிருந்தாலும், வாக்கு யாருக்கு என்பது தான் கேள்வி. இதற்கான முடிவை ஏப்.6-ல் வாக்கு எந்திரத்தில் தான் பதிவு செய்வார்கள் வாக்காளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

SCROLL FOR NEXT