அருப்புக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிப்பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம.
ஆனால் கடந்த ஆண்டு கரோனா சூழலால் கோயிலின் வரலாற்றில் முதல்முறையாக அத்திருவிழா நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த எமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே இந்த ஆண்டு இத்திருவிழா வெகு விமர்சையாக மேள தாளங்களுடன் , வானவேடிக்கையுடன் பள்ளி, கல்லூரி மாணவிகளின் சிலம்பாட்டம், வீர வாள் ஆட்டம் மற்றும் நடனக் குழுவினருடன் இளைஞர்கள் உற்சாகமாக ஆட்டம் ஆடி விழாவினை சிறப்பித்து விழா கொடியினை நகர் பகுதி சந்தை வழியாக வலம் வந்து முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் பூஜை செய்து கொடியேற்றம் தொடங்கியது.
இக்கொடியேற்றத்தின்போது முதலில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.
பின்னர் கொடிக்கம்பத்திற்கும் மஞ்சள், குங்குமம் திருமஞ்ணப்பொடி, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றது.
அதையடுத்து நடை பெற்ற கொடியேற்ற நிகழ்வின் போது, பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி பக்திமுழக்கம் இட்டு அம்மனை வழிபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.