முகப்பு
தமிழ்நாடு

பிரசாரத்தின் இடையே பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு அழைத்த அதிகாரிகள்

விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
பகிர்:

விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்துகொண்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை கரோனா பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகிறது. முன்னதாக விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இதனால் விருத்தாச்சலத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

பிரேமலதாவின் தம்பி சுதீஷுக்கும், அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து பிரேமலதாவையும் அழைத்துள்ளனர். ஆனால், பிரேமலதா கரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →