விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கும் , தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று விருத்தாச்சலம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொருளாளரும் விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனைக்கு அழைத்துள்ளனர். பிரசாரத்தில் இருப்பதாகக்கூறி அப்போது மறுத்த அவர், பிற்பகலில் சோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.