தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12 நாள்களில் 135 % அதிகரிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த 12 நாள்களில் 135 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த 12 நாள்களில் 135 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழகத்தில் மார்ச் 13-ஆம் தேதி ஒரு நாளில் புதிதாக 695 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 24-ஆம் தேதி 1,636 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 12 நாள்களில் 135 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது குறித்த புள்ளி விவர விளக்க வரைபடத்தையும் இணைத்துள்ளது.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க,
முகக்கவசம் அணிவோம் !!
சமூக இடைவெளியினை கடைபிடிப்போம் !!
சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உறுதி செய்வோம் !!
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !!
கரோனா பரவலை தடுப்போம் !! என்றும் வலியுறுத்தியுள்ளது.