அஞ்சல் வாக்கு தொடர்பாக திமுக சார்பில் வழக்கு: நாளை விசாரணை
அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை: அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை வழங்காமலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் மார்ச் 29-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சல் வாக்கு செலுத்துபவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் வழங்காமலேயே, வாக்குப்பதிவு நடைபெறுவதாக திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.