பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிரேமலதாவிற்கு கரோனா இல்லை

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனை  கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

DIN


தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனை  கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

விருத்தாசலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது பிரேமலதாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு 'நெகடிவ்' என முடிவு வந்துள்ளது.

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கரோனா இருப்பதால், விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரேலமதாவிற்கும் நேற்று (மார்ச் 24) கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பிரசாரம் முடிந்த பிறகு கரோனா பரிசோதனை செய்துகொள்வதாக அவரது தரப்பில் கூறப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசாரத்தில் உணவு இடைவேளையின்போது பிரேமலதாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

தற்போது அவருக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளதால், தொடர்ந்து பிரசாரப் பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT