கம்பத்தில் சாந்த காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
தேனி மாவட்டம் கம்பத்தில் சாந்த காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் சாந்த காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
இரண்டு நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் முதல் நாள் அதிகாலையிலேயே பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சாந்த காளியம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார், அனைத்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவினைத் தொடர்ந்து, விரதமிருந்த பெண் பக்தர்கள் புதன் கிழமை இரவு மேளதாளம் முழங்க முளைப்பாரி எடுத்து கள்ளர் பள்ளி தெரு, மெயின் ரோடு, வடக்கு காவல் நிலையம், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை வழியாக ஊர்வலமாக வந்து சுருளிப் பட்டி சாலை தொட்டன்மான் துறை அருகே முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்.
விழா ஏற்பாடுகளை கம்பம் வடக்கு ராஜகுல அகமுடையார் சமுதாய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.