தமிழக மீனவர்கள் 40 பேர் கைது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை
தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இது போல தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.