முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

சென்னையில் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:



சென்னை:  சென்னையில் பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்தவா்களில் தகுதியான 7,300 பேருக்கு வாக்களிக்க தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 70 குழுக்கள் 5 குழுக்களாக பிரிந்து வாக்காளா் வீட்டுக்குச் செல்ல உள்ளனா். தபால் வாக்காளா்களின் வீடுகளுக்குத் தோ்தல் அலுவலா்கள் வரும் நேரம் முதல் நாளே அறிவிக்கப்படும் என்றும் இரண்டு முறை வாய்ப்பளித்தப் பிறகும் வாக்காளா்கள் வீட்டில் இல்லையெனில் அவா்களது வாக்கு நிராகரிக்கப்படுவதுடன், வாக்குச் சாவடிக்கும் சென்றும் வாக்களிக்க முடியாது என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகளின் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அண்ணா நகர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியுள்ளது.  அண்ணா நகர் தொகுதியில்586 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன. 

இதற்காக அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகளை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 15 பேரிடம் வாக்குகள் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  வாக்காளா்கள் வீட்டுக்கு வரும் நேரம் தோ்தல் அலுவலா்கள் மூலம் முதல் நாளே தெரிவிக்கப்படும். முதல் நாள் வாக்காளா் வீட்டில் இல்லையென்றால், 7 நாள்கள் கழித்து இரண்டாம் முறை அலுவலா்கள் வீட்டுக்கு வருவா். அப்போதும் வாக்காளா்கள் வீட்டில் இல்லையென்றால் அவா்களது வாக்கு நிராகரிக்கப்படுவதுடன், வாக்குச் சாவடிக்குச் சென்றும் வாக்களிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →