தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.33,856

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்தது. கடந்த ஒருவாரத்துக்கு முன்பு, பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.16 உயா்ந்து, ரூ.4,232 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.69.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.69,300 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,232

1 பவுன் தங்கம்...............................33,856

1 கிராம் வெள்ளி.............................69.30

1 கிலோ வெள்ளி.............................69,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,216

1 பவுன் தங்கம்...............................33,728

1 கிராம் வெள்ளி.............................69.50

1 கிலோ வெள்ளி.............................69,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT