நெல்லூர் அருகே சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் பலி 
தமிழ்நாடு

நெல்லூர் அருகே சாலை விபத்து: சென்னையை சேர்ந்த 8 பேர் பலி

ஆந்திரம் மாநிலம் நெல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 

DIN



விஜயவாடா: ஆந்திரம் மாநிலம், நெல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 

சென்னை பெரம்பூரை சேர்ந்த 15 பேர் டெம்போ டிராவலர் வேனில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் ஆந்திரம் மாநிலம், கன்னூல் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நெல்லூர் அருகே தாமரமடகு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், டெம்போ டிராவலர் வேனில் இருந்த 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்து நெல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT