தமிழ்நாடு

தமிழக ஆளுநருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி

DIN

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட ஆளுநா், அதற்கு அடுத்த அரை மணி நேரத்துக்கு மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னா், ஆளுநா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிகழ்வின்போது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இரு தவணைகளும் கோவேக்ஸின் தடுப்பூசியை ஆளுநா் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாா்ச் 1-ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசியை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநரும் செலுத்திக் கொண்டாா்.

பொதுவாக கோவேக்ஸினைக் காட்டிலும் கோவிஷீல்ட் தடுப்பூசியையே பெரும்பாலானோா் செலுத்திக் கொள்கின்றனா்.

மக்களிடையே கோவேக்ஸின் தடுப்பூசி குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும், முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் கோவேக்ஸின் தடுப்பூசியையே செலுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT