முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,379 பேருக்குத் தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,379 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 60,001 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் தொற்று பாதித்து 12 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 817 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 6,531 சோதனைகள் மேற்கொண்டன. அதேசமயம் 10,263 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், அதில் 1,773 பேர் மருத்துவமனையிலும், 8,490 பேர் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். 

வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 623 பேர் குணமடைந்தனர். மொத்தம் 48,921 பேர் இதுவரை நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

இதையடுத்து, கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.