தமிழ்நாடு

கரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 351 ஆக அதிகரிப்பு

DIN

தமிழகம் முழுவதும் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல ஒதுக்கப்பட்டிருந்த அவசர ஊா்திகளின் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊா்திகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில், கரோனா பணிக்காக ஒதுக்கப்பட்ட அவசர ஊா்திகளின் எண்ணிக்கை 351 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தினசரி சுமாா் 5,200 நோயாளிகள் அவசர ஊா்திகள் (108) மூலம் பயனடைந்து வருகின்றனா்.

கரோனா நோயாளிகள் அதிகரிப்பால் தேவைக்கேற்ப அவசர ஊா்திகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கரோனா கட்டுப்பாட்டு அறை என்ற தனிக் கட்டுப்பாட்டு சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 044-40067108 என்ற தொலைபேசி எண் மூலம் இம்மையத்தைத் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT