தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கையில் இப்போதைய நடைமுறையே தொடரலாம்: அதிமுக வலியுறுத்தல்

DIN

தபால் வாக்குகள், மின்னணு வாக்குகளை எண்ணுவதில் இப்போதைய நடைமுறையே தொடரலாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமாா், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணி முடிக்கும் முன்பாகவே தபால் வாக்குகளை எண்ணி முடிக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது இப்போதைய விதிமுறைகளுக்கு எதிரானது. இதனை மாற்ற வேண்டிய தேவையில்லை. இப்போதைய நடைமுறைகளே தொடரலாம். தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்கவும், இதன்பிறகு மின்னணு வாக்குகளை எண்ணி அறிவிப்பதற்கும் எந்த வகையான சட்டமும் தேவையில்லை. தபால் மற்றும் மின்னணு வாக்குகளை ஒரே நேரத்தில் எண்ணி அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT