தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1953 மார்ச் 1-இல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி - தயாளு அம்மாளுக்குப் பிறந்தார். பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர்.

14 வயதாக இருக்கும்போது 1967-ஆம் ஆண்டு முரசொலி மாறனுக்காக முதன்முறையாகப் பிரசாரம் செய்தார். 1973-இல் திமுக பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு கொண்டு வந்த நெருக்கடி நிலையின்போது 1975-ஆம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்றார். அதற்காக மிசாவில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.


1984-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டார். ஆனால் முதல் தேர்தலில் அதிமுக உறுப்பினர் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1991-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தோல்வி கண்டார்.


அதற்குப் பிறகு தொடர்ந்து 1996, 2001, 2006-ஆம் ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். 2011, 2016,  2021 ஆகிய  தேர்தல்களிலும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 


1996-ஆம் ஆண்டு முதன்முறையாக மக்கள் வாக்களித்து சென்னையின் 37-ஆவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக அரசு கொண்டு இயற்றிய 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தால் மேயர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.


2006-ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாகத் துறை அமைச்சரானார். திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2009-ஆம் ஆண்டு துணை முதல்வராக பதவியேற்றார். தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அப்பதவி உருவாக்கப்பட்டது. 

2011-ஆம் ஆண்டு வரை துணை முதல்வராக நீடித்தார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT