தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா

DIN


சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பிரபலங்கள், மூத்த அமைச்சர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பொது சுகாதார ஆய்வகத்தில் செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். எனது தொடர்பில் இருந்த அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 
தயவு செய்து கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT