சுகாதாரத் துறை சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமனம்: தலைமைச் செயலாளா்வி.இறையன்பு உத்தரவு
சுகாதாரத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சுகாதாரத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக பி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து, தலைமைச் செயலாளா் வி.இறையன்பு, சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
பி.செந்தில்குமாா் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புப் பணி அதிகாரி (பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா்)
டி.ஜகந்நாதன் - பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளா் (பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையாளா்)
தாரேஷ் அஹமது - தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் (தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)
எஸ்.உமா - தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் (ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியா்)