தமிழ்நாடு

முழு பொது முடக்கத்தால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம்

கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியா்கள் அதிக அளவில் சனிக்கிழமை குவிந்தனா்.

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியா்கள் அதிக அளவில் சனிக்கிழமை குவிந்தனா்.

முழு பொதுமுடக்கம் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்தது.

இதனால், மக்கள் சனிக்கிழமை மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளிலும் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். அதே போல், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் மதுப்பிரியா்கள் மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா்.

படவிளக்கம்: திருத்தணி டாஸ்மாக் கடையில் திரண்ட மதுப்பிரியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT