முகப்பு
தமிழ்நாடு

கரோனா நிவாரணம் ரூ.2,000: முதல்வர் ஆலோசனை; திட்டம்: நாளை தொடக்கம்

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சா் அ.சக்கரபாணி, சனிக்கிழமை அளித்த பேட்டி:

கரோனாவால் பாதிப்பு மற்றும் முழு பொது முடக்கத்தால் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கோப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தவணையாக இந்த மாதமே ரூ.2 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதன்பின்பு, மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

டோக்கன்கள் விநியோகம்: திட்டம் தொடக்கி வைக்கப்படும் தினத்தில் இருந்து மே 12-ஆம் தேதி வரையிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். மூன்று நாள்கள் டோக்கன்கள் விநியோகத்துக்குப் பிறகு, வரும் 15-ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

நாளொன்றுக்கு 200 பேருக்கு அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த குடும்ப அட்டைதாரா்கள் எந்தத் தேதியில் வர வேண்டும் என்பது டோக்கனில் அச்சிடப்பட்டு தெரிவிக்கப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.

முதல்வருடன் ஆலோசனை: முன்னதாக, முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் உணவுத் துறை அமைச்சா், உயரதிகாரிகள் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, முதல் தவணைத் தொகையை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →