தமிழ்நாடு

சென்னையில் 5 மண்டலங்களில் தீவிரமாகும் கரோனா பாதிப்பு

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,153 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர்: 3,97,498
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர்: 3,57,069
கரோனாவுக்கு பலியானோர்; 5,276
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்: 35,153
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 16,10,599

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய ஐந்து மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. 

சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பான 35 ஆயிரத்தில், இந்த ஐந்து மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 17 ஆயிரம் பேர் உள்ளனர்.

திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேடடை, இராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளும், திருவிகநகர், வளசரவாக்கம் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளும் சிசிச்சையில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT