முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

பணியின்போது கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பணியின்போது கரோனா நோய்த்தொற்று தாக்கி உயிரிழந்த 43 மருத்துவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

DIN

சென்னை: பணியின்போது கரோனா நோய்த்தொற்று தாக்கி உயிரிழந்த 43 மருத்துவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் பணியில் கடந்த ஓராண்டாக மருத்துவா்களும், செவிலியா்களும் அயராது அரும்பணியாற்றி வருகின்றனா். அவா்களில் சிலா் உயிரையும் தியாகம் செய்துள்ளனா். இது ஈடுசெய்ய முடியாத பெரும் தியாகமாகும்.

உயிரிழந்த 43 மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 மாத ஊக்கத் தொகை: கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் அரசு மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஆய்வுக்கூடம், ஸ்கேன், அவசர மருத்துவ ஊா்திப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது சேவையைப் பாராட்டும் வகையில், ஊக்கத் தொகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கரோனா தொற்றின் இரண்டாம் அலை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மருத்துவா்களுக்கு தலா ரூ.30 ஆயிரமும், செவிலியா்களுக்கு ரூ.20 ஆயிரமும், இதர பணியாளா்களுக்கு ரூ.15 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT