முகப்பு
தமிழ்நாடு

கரோனா: முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் ரூ.10 லட்சம் அளிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், நிவாரணம் வழங்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கும்படி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 
இதைத்தொடா்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலா் நிதியளித்து வருகின்றனா். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளது. 
சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான கசோலையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார். இந்நிகழ்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாவு ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.