தமிழ்நாடு

தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN


தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

வருகிற மே 14 -ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 -ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கரையைக் கடக்கலாம்.

புயலால் லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்ரம், தென் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT