இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஆவணத்தில் ஈஷா மையத்தின் படத்தை பயன்படுத்தியதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமீபத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்பான ஆவணத்தை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விமான நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆவணத்தில் தமிழ்நாட்டைக் குறிப்பிடும் பகுதியில் கோவை ஈஷா யோகா மையத்தின் யோகி சிலை படத்தை பயன்படுத்தியதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். வன்மையான கண்டனம். உடனே மாற்று” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.