தமிழ்நாடு

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் இயங்கும். மருந்துக் கடைகளும் செயல்படும். மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவித்தது. 

பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இதனிடையே இன்று அனைத்து சட்டமன்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்த தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்க படலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

சென்னை காவல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சியில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT